Header Ads



கட்டழகர் போட்டியில் இலங்கையருக்கு, அமெரிக்காவில் கிடைத்த இடம்


அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான அர்னோல்ட் கிளாசிக் (Arnold Classic 2023) கட்டழகர் போட்டியில் இலங்கையின் லூசியன் புஷ்பராஜ் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். 


இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் Super Heavyweight பிரிவில் அவர் பங்கேற்றிருந்தார். 


அர்னோல்ட் கிளாசிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை வீரராக புஷ்பராஜ் பதிவாகியுள்ளதுடன், அவர் போட்டியில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். 


2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியிலும் அவர் நான்காம் இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


2012 முதல்  Mr. Sri Lanka பட்டத்தை வென்ற புஷ்பராஜ், ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.


கொலம்பஸ் நகரில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 100,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் 10,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களையும் ஒன்றிணைக்கும் அர்னோல்ட் கிளாசிக் கட்டழகர் போட்டி உலகில் மிகப்பெரியளவில் இடம்பெறும் போட்டிகளில் ஒன்றாகும். 


இந்த போட்டிக்கு அதன் இணை நிறுவனர், புகழ்பெற்ற கட்டழகர் மற்றும் ஹொலிவுட் நட்சத்திரமான Arnold Schwarzenegger-இன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

 

No comments

Powered by Blogger.