Header Ads



சட்டவிரோத சாக்லைட்டுக்கள் தொடர்பில், அவதானத்துடன் செயற்படுங்கள்


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகளின் காலாவதி திகதி, உற்பத்தி திகதி போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடாமல் இலங்கை முழுவதும் உள்ள சில கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, மனித பாவனைக்கு பொருத்தமற்ற சாக்லேட் விற்பனை செய்யும் இடங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அண்மையில் ஆரம்பித்திருந்தனர்.


அதன் கீழ் ஹலவத்த பகுதியில் முதல் சோதனை நடத்தப்பட்டது.


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளை நாடளாவிய ரீதியில் விற்பனை செய்யும் இடங்களில் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோத முறையில் கொண்டு வரப்படும் சாக்லைட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.