இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிளி மூக்கு சேவல் கண்காட்சி
- நூருல் ஹுதா உமர் -
அகில இலங்கை ரீதியான கிளி மூக்கு சேவல்களுக்கான கண்காட்சி கிழக்கு மாகாணம் காத்தான்குடியில் (05.03.2023) காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்றது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இவ் கிளி மூக்கு சேவல்களுக்கான கண்காட்சி 60 சேவல்களும் 45 வளர்ப்பாளர்களுடன் சிறப்பாக இடம்பெற்றது. இக் கண்காட்சிக்கு கலந்து கொள்வதற்காக இலங்கையில் அனைத்து பகுதிகளிலிருந்தும் கிளி மூக்கு கோழி வளர்ப்பாளர்கள் தத்தமது கிளிமூக்கு சேவல்களுடன் வருகை தந்திருந்தனர்.
இவை தென்னிந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட போதிலும் தற்போது பல நாடுகளில் அழகிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றது இது மனிதர்களுடன் பாசத்தோடும் தனது வீட்டின் ஒரு அங்கமாக மாறிவிட்டதாக வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதே போன்ற பல கண்காட்சிகள் இந்தியாவில் போன்ற நாடுகளில் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இதுவே இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இடம்பெறுகின்ற கிளி மூக்கு சேவல்களுக்கான கண்காட்சி எனவும் சர்வதேச தரத்திலான கிளிமூக்கு சேவல்கள் எம் நாட்டிலும் இருக்கின்றது என்பதை சர்வதேசத்திற்கு பறைசாற்றும் பொருட்டும், தற்போது இலங்கையில் இருந்து கிளிமூக்கு கோழிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இவ் கண்காட்சி மூலம் வெளிநாடுகளிலுள்ள வளர்ப்பாளர்கள் இலங்கையில் நல்ல தரத்திலான கிளிமூக்கு கோழிகள் இருப்பது என்பதை அறிந்து கேள்விகளும், ஏற்றுமதிகளும் அதிகரிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வளர்ப்பாளர் கருத்து தெரிவிக்கும் போது இனம், மதம், மொழிக்கு அப்பால் "Parrot Beak" என்ற ஒற்றைச் சொல்லுக்குள் இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உள்ளோம் மற்றும் இவ்வளவு நாட்களும் தொலைபேசிகளில் உரையாடிக் கொண்டிருந்த நாம் இன்று இக் கண்காட்சி மூலம் ஒன்று கூடியதை இட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இதுவே எமக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதுகிறோம் என்றார்.
இதுபோல இன்னும் பல கண்காட்சிகளை நடத்த வேண்டும் என்றும் இத்துறைக்கு புதியவர்களை உள்வாங்க வேண்டும் என்றும் இத்துறையில் மிக நீண்ட காலம் நீடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும் இதற்கு ஏற்பாடு செய்த ஏற்பாடு குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறான கோழி வகைகளை தனது வாழ்நாளில் இப்போது தான் பார்ப்பதாகவும் தமக்கும் இவ்வாறான கோழிகளை வளர்ப்பதற்கு ஆர்வங்கள் இருப்பதாகவும் இது சிறந்த பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய ஒரு தொழில் முயற்சியாகவும் நாம் கருதுவதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
Post a Comment