Header Ads



டக்ளஸ் தேவானந்தாவின் அடியாட்களை அனுப்பி பிரச்சினைகளை மறைக்க முடியாது


யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (ஐ.யு.எஸ்.எப்) உறுப்பினர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்த ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான முறையில் செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்தார்.


“டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) அங்கத்தவர்களே பதாகைகளை ஏந்தியவாறு வந்தனர்” என முதலிகே கூறினார்.


“போதையில் இருந்த சுமார் 25 பேர் கொண்ட குழு எங்களிடம் வந்து ‘அறகலய’ வேண்டாம் என்று கூறியது.வடக்கு மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பலாம் என்று சொன்னார்கள்,” என்றார் முதலிகே.


அச்சுறுத்தல் மூலம் நிகழ்வுகளை தவறாகப் புரிந்துகொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக முதலிகே குற்றம் சாட்டினார்.


“தெற்கில் உள்ளவர்களைப் போன்றே வடக்கிலுள்ள தாய் தந்தையர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களது பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர், சிலர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களுக்கு இன்னும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது” என்று அவர் விளக்கினார்.


அரசாங்கம் டக்ளஸ் தேவானந்தாவின் அடியாட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி பிரச்சினைகளை கம்பளத்தின் கீழ் மறைக்க முற்பட்டால் அதை செய்ய முடியாது என முதலிகே தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் தமது கலந்துரையாடல் வெற்றியடைந்ததாகத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயம் வெற்றிகரமாக முடிவடைந்தது எனவும்  தெரிவித்தார்.


“யாழ்ப்பாண மக்கள் எங்களை திருப்பி அனுப்பி வைத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது உண்மையல்ல, அது திருத்தப்பட வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.  

No comments

Powered by Blogger.