Header Ads



பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதை, மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை ஜனாதிபதி ரணிலும் நன்கறிவார்


 தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, எம்மை இனவாதிகளாக சித்தரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983ஆம் ஆண்டு ஜுலை காலப்பகுதியில் தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீது சுமத்தியது என 43ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.


அத்துடன் நாட்டில் இனவாத முரண்பாட்டையும், ஆயுத போராட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதை நாட்டு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை ஜனாதிபதி ரணிலும் நன்கறிவார் என சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.