Header Ads



நிர்க்கதிக்குள்ளான அரச ஊழியர்கள், என்ன செய்வதென்று எம்மிடம் கேட்கின்றனர்


தற்போது தேர்தல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


இது எப்போது, எவ்வாறு இடம்பெறும் என்று யாரும் எமக்கு கூறியதில்லை, நிச்சயமற்ற நிலையிலேயே இது இடம்பெறுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த அரச ஊழியர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். 


மேலும்,  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இதனால் சம்பளம் இன்றி உள்ளனர்.  அவர்கள் என்ன  செய்வதென்று எம்மிடம் கேட்கின்றனர் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

1 comment:

  1. கோடானகோடி கிம்பளத்தால் வாழும் உம்மைப் போன்றவர்கள், அவ்வாறு சம்பளமில்லாது வாழும் அரச ஊழியர்கள் தலா ஒருவர் குறைந்தது நான்கு பேருக்கு அவர்களுடைய பாராளுமன்ற சம்பளத்தைப் பகிர்ந்து கொடுத்தால் பிரச்சினையின் மூன்றில் ஒரு பங்கினரின் பிரச்சினை முடிந்து விட்டது. இதைச் செய்துவிட்டு அடுத்த பிரச்சினைக்கு தீர்வு பற்றி யோசிப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.