வழக்குகளில் இருந்து தப்பிக்கும் ரவி
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (15.03.2023) சட்டமா அதிபருக்கு இவ் உத்தரவை வழங்கியுள்ளது.
தமித் தோட்டவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ரவி கருணாநாயக்கவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ தனது கட்சிக்காரருக்கு எதிரான குற்றச்சாட்டை நீடிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்போது தீர்ப்பின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை ஆராய்ந்த நீதியரசர் தமித் தோட்டவத்த மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் தீர்மானம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளதால் சட்டமா அதிபர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய சட்டத்தில் அவர்களுக்கு விசேட சலுகைகளும், விரிசல்களும் நிறைய இருக்கும். அவற்றால் புகுந்து விளையாடலாம் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே என்ன வழக்கு பதிவு செய்தாலும் அவற்றிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழியையும் அவர்களே உருவாக்கியிருக்கின்றனர். எனவே அந்த சட்டங்கள் அவர்களைக் காப்பாற்றும். ஆனால் அவர்களையும் எங்களையும் படைத்த இரட்சனுயை சட்டத்தின் முன்னால் அவர்கள் ஒருபோதும் பாதுக்கப்படமாட்டார்கள்.அவர்கள் குற்றங்கள் இழைத்திருந்தால் அவற்றுக்குரிய தண்டனை அவர்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் சரியாகக் கிடைக்கும். பாடசாலை செல்லும் பிள்ளைக்கு அடுத்த நாள் பாடசாலை செல்ல குறிப்பி்ட்ட தொகைப்பணம் தேவை. அது அவருடைய பெற்றோரிடம் இல்லை. என்ன செய்வது எனத் தெரியாது அடுத்த வீட்டுத் தோட்டத்தில் கண்டெடுத்த இரண்டு தேங்காய்கள் திருடப்பட்டதாக அடுத்தவீட்டார் செய்த முறையீட்டை அடுத்து அந்தப் பிள்ளையை பொலிஸ் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இரண்டு வாரம் சிறைத்தண்டனை வழங்கும் சட்டம், நாட்டின் கோடான கோடி பொதுமக்களின் பணத்தைக் களவாடி நாட்டின் சொத்துக்களை விற்று பணத்தைக் கொள்ளையடித்து வௌிநாடுகளில் முதலீடு செய்து இந்த நாட்டில் சுதந்திரமாகவும் ஆடம்பரமாகவும் வாழும் எத்தனையோ பேரை அதே சட்டம் பாதுகாக்கின்றது. இந்த சட்டம் பெரும்பான்மையினரையும் சிறுபான்மையினரையும் வேறுபடுத்தி தீர்ப்பு வழங்கும் வகையில் இந்த சட்டங்கள் இருக்கின்றன. இது போன்ற ஒரு நாடு ஒருநாளும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லாது. அதன் அழிவும் நாசமும் பொதுமக்களை எப்போதும் நெருக்கடிக்கு மேல் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ReplyDelete