எழுச்சியடையும் ரூபா, இராஜாங்க அமைச்சர் கூறும் காரணம்
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் கூற்றுப்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2023 பெப்ரவரிக்குள் 23.5% அதிகரித்து 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், இதனை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2022 செப்டம்பரில் 94.9% ஆக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1% ஆகக் குறைந்துள்ளது.
2022 செப்டம்பரில் 29,802 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 261% அதிகரித்து 2023 பெப்ரவரிக்குள் 107,639 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இந்த அபிவிருத்திகள் அனைத்தும் சாத்தியமானதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment