Header Ads



சாதனை படைத்த முகமது சலா



பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் முன்னணி அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் மிக மோசமான தோல்விஐச் சந்தித்துள்ளது. அந்த அணியை லிவர்பூல் அணி 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.


உலக ரசிகர்களின் கவனம் பெற்ற பிரீமியர் லீக் தொடரின் முக்கியமான ஆட்டத்தில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. லிவர்பூல் நகரில் உள்ள ஆன்பீல்டு மைதானத்தில் பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்தப் போட்டி நடைபெற்றது.


 லிவர்பூல் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா 66 மற்றும் 83-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்.


மனதளவில் தளர்ந்து போயிருந்த மான்செஸ்டர் யுனைடெட் வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அபாரமாகச் செயல்பட்டு, அந்த அணியின் நம்பிக்கையை சீர்குலைத்த லிவர்பூல் அணி முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


இந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்ததன் மூலம், லிவர்பூல் அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை முகமது சலா பெற்றுள்ளார். அந்த அணிக்காக இதுவரை மொத்தம் 129 கோல்களை அவர் அடித்துள்ளார். மான்செஸ்டர் அணிக்கு எதிராக லிவர்பூல் அணிக்கு அதிக கோல் அடித்தவரும் அவர்தான்.


2017-ஆம் ஆண்டில் லிவர்பூல் அணியில் முகமது சலா இணைந்த பிறகு அந்த அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். அந்த கிளப்பில் இணைந்த பிறகே கால்பந்து உலகில் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராக முகமது சலா மாறினார்.

No comments

Powered by Blogger.