Header Ads



இந்தியா, பாகிஸ்தானை தோற்கடித்து இலங்கைக்கு கிடைத்த இடம்


உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 இன் படி, இலங்கை 112 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் ஆறாவது இடத்தில் பின்லாந்து  உலகின் மகிழ்ச்சியான முதல் இடத்தை பெற்றுள்ளது.


இந்த அறிக்கையின்படி இலங்கையின் நிலை 2022ஆம் ஆண்டு 127வது இடத்தில் இருந்ததை விட மேம்பட்டுள்ளது.


உலகெங்கிலும் உள்ள மகிழ்ச்சியான இடங்களைக் கண்டறிய, ஆராய்ச்சியாளர்கள் ஆறு முக்கிய காரணிகளை பகுப்பாய்வு செய்துள்ளனர்.


சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை என்பனவே அவையாகும்.


நெருக்கடிகள் இருந்தபோதிலும், உலகளாவிய வாழ்க்கை திருப்தி தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் இருந்ததைப் போலவே இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் முடிவில்லா காடுகளுடன் அமையப்பெற்றுள்ள வடதுருவ நாடான பின்லாந்து, அதன் விரிவான நலன்புரி அமைப்பு, அதிகாரிகள் மீது அதிக நம்பிக்கை மற்றும் அதன் 5.5 மில்லியன் மக்களிடையே குறைந்த அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றிற்காக தொடர்ந்தும் முதல் இடத்தை பெற்று வருகிறது.


யுக்ரைனின் மகிழ்ச்சித் தரவரிசை இந்த ஆண்டு 98ல் இருந்து 92க்கு முன்னேறியது, ரஷ்ய படையெடுப்பு இருந்தபோதிலும் இது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


மகிழ்ச்சி தரப்பட்டியலில் டென்மார்க் இரண்டாவது இடத்திலும் ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும் இஸ்ரேல் நான்காவது இடத்திலும் உள்ளன. 2020 முதல் அட்டவணையில் அடிமட்ட இடத்தைப் ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.


இந்த தரவரிசையில் அண்டை நாடான இந்தியா 126வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.