ரூபா வலுவடைவதாக கூறுவது பொய், பணமில்லாத நாடாகவே இலங்கை மாறியுள்ளது
ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக கூறுவது பொய்யானது என ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கைகள் முற்றிலும் பொருத்தமற்றவை எனவும், தேர்தலை நடத்துவதற்கு போதிய பணம் இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் அது பொய்யானது. திடீரென இதனை அரசாங்கம் கூறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் பணம் பெறுமதி அதிகரிக்கின்றது, டொலரின் பெறுமதி குறைகின்றது என ஒரு நாடகம் அரங்கேற்றுகின்றனர். அந்த நாடகத்தின் கதாநாயகர் யார் என்பதை அறிய பொதுமக்கள் ஆவலாக இருக்கின்றனர்.
ReplyDelete