Header Ads



தாயின் தவறான முடிவினால் ஊனமுற்ற, வாய் பேசமுடியாத பிள்ளைகளுக்கு நிகழ்ந்த பரிதாபம்


தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் செய்தியொன்று கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.


இந்தச் சம்பவம் நேற்று (05) காலை பதிவாகியுள்ளதுடன், கிணற்றில் வீசப்பட்ட மூத்த ஊனமுற்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தாயும் மற்றைய வாய் பேச முடியாத சிறுவனும் கல்லில் தொங்கிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு கபிதிகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


சம்பவத்தில் 21 வயதுடைய மாற்றுத்திறனாளி ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.


சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கபிதிகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.