Header Ads



உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளரினால், கொலை செய்யப்பட்ட பெண்


தங்காலை நெடோல்பிட்டிய விவசாய சேவை நிலையத்தின் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் நேற்று உரம் விநியோகிக்கப்படாமை தொடர்பான தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.


தங்காலை நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சமகாலத்தில் விவசாய சேவை நிலையங்களில் விவசாயிகளுக்கு உரங்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், நெடோல்பிட்டிய தங்காலை விவசாய சேவை நிலையத்திலும் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கும் போது உரம் கேட்டு குறித்த அதிகாரியுடன் நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை திட்டி விட்டு சென்றுள்ளார்.


இந்நிலையில், நேற்று காலை வேலைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, ​​வீட்டின் அருகே காவலில் இருந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெண் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நெடோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான டேனிபேபி என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் என்பவர், சந்தேகத்தின் பேரில் தங்காலை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.