ஆடை வடிவமைப்பாளரை மணமுடித்தார் வணிந்து ஹசரங்க
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வணிந்து ஹசரங்க திருமண பந்தத்தில் இன்று -09- இணைந்தார்.
விந்த்யா எனும் பெண்ணை அவர் மணமுடித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த ஆடை வடிவமைப்பு நிபுணரான விந்த்யா மானப்பெருமைவை அவர் திருமணம் செய்துள்ளார்.
இந்தத் திருமண வைபவத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்றிருந்தனர்.
25 வயதான ஹசரங்க ரி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment