Header Ads



மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்தூள் பூசி, புழுவை உடலுக்குள் செலுத்திய கணவன்


தன்னுடைய மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல்,  அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.


பாதுக்க அங்கம்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட நான்கு பிள்ளைகளின் தாயான 39 வயதான பெண்ணே, பாதுக்க பொலிஸ் நிலையத்தி^ன் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரியிட.ம் மேற்கண்டவாறு முறையிட்டுள்ளார்.


மதுபோதையில் வந்த தன்னுடைய கணவன், தன்னுடைய கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு அட்டை அல்லது புழுவொன்றை தன்னுடைய உடலுக்குள் செலுத்தினார். அது தனக்கு கடுமையான வலியை ஏற்படுத்தியது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு செய்வதற்கு இடமளிக்காமல் விட்டால், கடுமையான தாக்குதல்களை மேற்கொள்வார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தன்னுடைய 11 வயதான மகளின் முன்னிலையிலேயே இவ்வாறு தாக்குதல் நடத்துவார் எனத் தெரிவித்த அந்த பெண், இதனால் மகளும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், நான்கு வயதில் குழுந்தையொன்றும்  தனக்கு இருக்கிறது என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


சந்தேகநபர் சாரதியாக கடமையாற்றுபவர் என்றும் அவருக்கு நிரந்த தொழில் இல்லை என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், சந்​தேகநபரான அவருடைய கணவன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார் என்றும் அவரை தேடி வலை விரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.   

No comments

Powered by Blogger.