ரூபா வலுவடைந்ததா..? அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
இலங்கை ரூபா வலுவடைந்துள்ளதாக கூறினால் போதாது அதனை நடைமுறையில் காட்ட வேண்டும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
இவற்றை நீக்கினால், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் சே்சாளர் நிஹால் செனவிரத்ன கூறுகையில்,
அமெரிக்க டொலரின் பெறுமதி இவ்வாறு நாளுக்கு நாள் குறைவடைவதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் பில்லியன் ரூபா அளவில் நட்டம் அடைகின்றனர்.
கடந்த 3 நாட்களுக்குள் டொலரின் பெறுமதி 50 ரூபாய் குறைந்துள்ளதோடு அது நூற்றுக்கு பத்து தொடக்கம் 15 வீத டொலரின் பெறுமதி குறைவு. ரூபாவிற்கு இணைந்ததாக டொலரை நிலையாக வைத்திருக்க மத்திய வங்கி தலையிட வேண்டும்.
இந்த நிலைமையை ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், சாதாரண மொத்த வர்த்தகர்கள் போன்று அனைத்து வர்த்தகர்களாலும் தாங்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலர் 300 ரூபாவுக்குச் சரியவில்லை. இரவோடு இரவாக சரிய வைத்தார்கள். இந்த சரிவுக்குப் பின்னால் நல்ல வடிவமைக்கப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. இந்தப்பக்கம் பொருட்களின் விலையைக் குறைக்கும் நாடகம். அந்தப் பக்கம் ரமலானுக்கு முஸ்லிம்கள் அதிகமாக பேரீத்தம் பழம் சாப்பிடுவதனால் அதன் இறக்குமதி வரியை ரூபா 200 இல் இருந்து 1 ரூபாவுக்கு குறைந்து முஸ்லிம்களின் அபிமானத்தைப் பெறும் நாடகம். இவையனைத்தும் மிகக்குறுகிய கால நாடகத்தின் பல்வேறு வடிவங்கள் தான் . அடுத்தபக்கம் ஐம்எப் இன் கடனைப் பெற்றுக் கொள்ள இரண்டு கோடி இருபது இலட்சம் மக்களின் விருப்பமோ அங்கீகாரமோ இல்லாமால் மின்சாரக்கட்டணத்தை 400% அதிகரித்து பொதுமக்களின் மேல் எல்லா வரிகளையும் விதித்து ஐஎம்எப்குக்கு நாடகம் காட்டும் இந்த அரசாங்கத்தை உடனடியாக துரத்தியடிக்க வேண்டும். ரூபாவின் பெறுமதி அதிகரித்தால், டொலரின் பெறுமதி குறைந்து சென்றால் உடனடியாக இறக்குமதி ஏற்றுமதிக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை உடனடியாகத் தளர்த்தினால் இந்த நாடகத்தின் உண்மை நிலையை அனைவரும் அறிந்து கொள்வார்கள். ஒரு வாரத்துக்கு முன்னர் டொலர் ஒன்று ரூபா 364 ரூபாவாக இருந்தது ஒரு வாரத்தின் பின்னர் அது 304 ரூபாவாகக் குறைவது உலகில் எந்த நாட்டிலும் நடைபெறாத உலக அதிசயம். அதன் உண்மை நிலையை இந்த வருட இறுதியாக முன்பு செப்டம்பர், அக்டோபர் மாதமாகும் போது டொலரின் பெறுமதி ரூபா 390 மேல் உயரும் என பிச் டேரிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உண்மைகளை மக்களுக்கு மறைத்து நாடகமாடும் இந்த அரசாங்கத்தை துரட்சி பண்ணுவதைத் தவிர வேறு எந்த தீர்வும் இல்லை.
ReplyDelete