Header Ads



மாலைத்தீவு அரசியல்வாதிகளிடம் வாங்கிக்கட்டிய ஹரின்


மாலைத்தீவில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதற்கு பெரிதாக எதுவும் இல்லை என இலங்கையின் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்கமாக தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு மாலைதீவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது . 


ஹரின் பெர்னாண்டோ , பெர்லினில் உலகின் மிகப்பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சி இடம்பெற்ற போது இந்தக்கருத்துக்களை வெளியிட்டார் . சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் நிறைய சலுகைகள் உள்ளன என்று அமைச்சர் பங்கேற்பாளர்களிடம் இதன்போது கூறினார் . 


மாலைதீவின் கடற்கரைகளுக்காக நிறைய பேர் பயணம் செய்கிறார்கள் , ஆனால் 5 நாட்களுக்குப் பிறகு நீங்கள் சோர்வடைவீர்கள் என்று அவர் கூறியுள்ளார் . 


இந்தநிலையில் ஹரின் பெர்னாண்டோவின் கருத்துக்கு , மாலைதீவின் சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் . 


மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஷிகபாவ் , இது குறித்து வெளியிட்ட தமது கருத்தில் , கடந்த மூன்று ஆண்டுகளாக உலகின் முன்னணி இலக்கு விருதை மாலைதீவு பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் . உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் . வண்ணமயமான பவளத் தோட்டங்கள் கொண்ட வெள்ளை மணல் மற்றும் செழுமையான நீலக் கடலை அனுபவிப்பதற்கு போதுமான நேரம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மாலைதீவுக்கு வருமாறு அவர் , இலங்கையின் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் . 


இதேவேளை , மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மவுஸ் தனது ட்விட்டர் பதிவில் , 2020 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உலகின் முன்னணி சுற்றுலா இடமாக மாலைதீவு தெரிவாகியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் 

No comments

Powered by Blogger.