Header Ads



"கபூரிய்யா களவாடப்படுவதை அணைவரும் பார்த்து கொண்டுதான் இருந்தோம்"


இன்றுடன் கபூரிய்யாவின் வரலாறு முற்றுப்பெறுகிறது.


இதையும் எமது சமூகம் பத்தோடு பதினொன்றாக பார்த்து விட்டு கடந்து செல்லும். அதில் கல்வி கற்றார்கள் என்பதற்காக  கபூரிய்யாவின் பழைய மாணவர்கள்தான் கடைசி வரைக்கும் அவர்களின் சக்திகேற்ப போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். இது ஒட்டு மொத்த சமூகத்தின் சொத்து, இதனை பாதுகாக்க எல்லோரும் முன்வாருங்கள். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமே இது உங்களின் சொத்து என்று தெருவுக்கு இறங்கி, கால்களை மாத்திரம் தான் பிடிக்க வில்லை, அழுது புலம்பி சமூகத்தை மீண்டும் மீண்டும் அழைத்து கொண்டே இருந்தார்கள். ஓரிருவரை தவிர அணைவரும் இதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம எங்கட வேலையை பார்க்கலாம் என்று கண்டும் காணாதது போல எங்கட சமூகம் கபூரிய்யா விடயத்தில் அமைதி காத்தது.


அதன் எதிரொலி இன்று கபூரிய்யா அதிபரை வெளியே விரட்டி விட்டு ஏனைய ஒஸ்தாத்மார், மாணவர்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது கபூரிய்யாவை விட்டு வெளியேருவதற்கு. 


முஸ்லிம் சமூகமே நீங்கள் அமைதியாகவே இருங்கள். ஏனெனில் இது உங்க வீட்டு பிரச்சினை இல்லையே. உலமா சபையே நீங்கள் இதற்கெல்லாம் வாய் திறக்காதீர்கள்.  நாளைக்கு ரமழான் பிறை எங்கட வீட்ல பார்ப்பதா உங்கட வீட்டில பார்ப்பதா என்பதில் நீங்கள் பிசியாக இருங்கள். வக்பு சபையில் இருப்பவர்களே உங்களால் இந்த வக்பு சொத்துக்களை பாதுகாக்க முடியாவிட்டால், வக்பு சொத்துக்களை பாதுகாக்க பொறுத்தமானவர்களுக்கு இடத்தை கொடுத்து விட்டு நகருங்கள்.


எனது சொத்தை களவாட முயற்சிப்பவனுக்கு எதிராக எனது வீடு எனக்குத்தான் சொந்தம் என்பதற்கு நான்தான் வழக்கு போடவேண்டும். ஆனால் 92 வருடங்களுக்கு மேல் வரலாற்றைக் கொண்ட  கபூரிய்யா ஒரு வக்ப் சொத்து என்பது நாடறிந்த உண்மை. இதற்கு துணையாக கடைசி வரைக்கும் அதில் கற்ற மாணவர்களும், ஓரிரு நல்லுள்ளம் கொண்டவர்களும் தான் அதனை பாதுகாக்க களத்தில் இருந்தனர். வக்பு வாரியம் இன்று வரைக்கும் பொறுப்பற்ற முறையில் வக்பு சொத்துக்களை வீனாக்கிக் கொண்டு இருக்கின்றாது. 


கபூரிய்யா களவாடப்படுவதை அணைவரும் பார்த்து கொண்டுதான் இருந்தோம். நாளை இதைப்பற்றி விசாரிக்கப்படுவோம். அதற்கு என்ன பதில் சொல்ல போகிறேன். உங்கள் மனச்சாட்சியை தொட்டு கேளுங்கள்.


பழைய மாணவன் 

பீ.சாஹிப்

No comments

Powered by Blogger.