Header Ads



இலங்கையில் குவைத் நாட்டு பரோபகாரிகளின் உதவிகள் தொடருகிறது


 (அஷ்ரப்  ஏ சமத்)


அநுராதபுரம்  மாவட்டம் கம்பிரிகஸ்வெவ மனாருல் உலுாம் மகா வித்தியாயத்திற்கு குவைத் நாட்டு பரோபகாரியின் நிதியொதுக்கீட்டில் நான்கு  வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டட நிர்மாணத்திற்கான அடிக்கல் 14 செவ்வாயக்கிழமை கல்லுாாி முன்றலில் நடைபெற்றது. 


 இந் ்நிகழ்வுக்கு அநுராதபுர  பாராளுமன்ற உறுப்பிணர் இஷாக்  ரஹூமானின் வேண்டுகோளில் இலங்கைக்கான குவைத் நாட்டுத் துாதுவர் கலாப் எம்.புதையிர் அவர்களின் வழிகாட்டலில் அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க்  நுாறுல்லாஹ் (நளீமி) யின் முயற்சியில் குவைத் இஸ்லாமிய கெயார் அமைப்பின் ஊடகவே இவ் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளது. 


இதற்கான முழு நிதியினையும் குவைத் நாட்டின் கொடையாளி   நதா அப்துல் அசீஸ் பின்த தலாமாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.


இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பிணர் இஷாக் ரஹ்மான் -


 எனது மனச்சாச்சியின்படி எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்கவில்லை.  நான் ஒருபோதும் பணத்திற்கோ, பதவிக்கோ சோரம் போகவில்லை. எதிா்கட்சி எம்.பியாக இருந்து கொண்டு என்னால் முடியுமான உதவிகளை எனது மாவட்ட மக்களுக்கு செய்துவருகின்றேன்.  இலங்கையில் ஏற்பட்ட கொவிட் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினைகளினால் அதிலும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பிணராகக் இருந்து கொண்டு எனக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் அபிவிருத்திகளை கொண்டு வரமுடியவில்லை. 


அரசாங்கத்திடம்  நிதி யின்மையால் சகல அபிவிருத்திகளையும் இலங்கையில் நிறுத்தி வைத்துள்ளது.  இப்பிரதேச மக்களின் துஆப் பிராரத்தனைகள், அவர்களின் முயற்சியினால் தான் நான் இரண்டுமுறை பாராளுமன்ற உறுப்பிணராக வரமுடிந்தது. மூவின மக்களும் தனக்கு வாக்களித்துள்ளனர்  அதனை நான் மறக்கமுடியாது.குவைத்  எனவும் பாராளுமன்ற உறுப்பிணர் இஷாக் ரஹ்மான் அங்கு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.