நைஜீரியாவின் ஜனாதிபதியாக சர்ச்சைக்குரிய போலா டினுபு வெற்றி
நைஜீரியாவின் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் போலா டினுபு வெற்றியை அறிவித்துள்ளார்.
70 வயது அனுபவ அரசியல்வாதியான டினுபு 36 வீத வாக்குகளை வென்றிருப்பதாக உத்தியோகபூர்வ முடிவு தெரிவிக்கிறது. அவரது பிரதான போட்டியாளரான அடிகு அபூபக்கர் 29 வீத வாக்குகளையும் தொழில் கட்சியின் பீட்டர் ஒபி 25 வீத வாக்குகளையும் வென்றிருக்கும் நிலையில் அவர்களது கட்சிகள் இந்தத் தேர்தலை நிராகரித்துள்ளன. மீண்டும் தேர்தலை நடத்தவும் கோரியுள்ளன.
நைஜீரியாவின் செல்வந்த அரசியல்வாதிகளில் ஒருவரான டினுபு, தான் ஆளுநராக இருந்த லாகோஸ் நகரை கட்டியெழுப்பியதை மையமாக வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
Post a Comment