கபூரியாவை பாதுகாக்க கொழும்புக்கு வெளியே முதலாவது போராட்டம் - திரண்டுவந்த மக்கள் (படங்கள்)
100 வருடங்கள் பழமைவாய்ந்த கபூரிய்யாவைப் பாதுகாப்போம், வக்ஃபு சொத்துக்களைப் பாதுகாப்போம் என்ற அடிப்படையில் மிகப் பெரும் ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (31) புத்தளத்தில் இடமம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து நிகழ்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார்ந்தோர், வாலிபர்கள், என சமூகத்தின் சகல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
போராட்டம் மிக அமைதியாக இடம்பெற்ற அதேவேளை, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், மக்கள் உணர்வு பூர்வமாக புனித நோன்பை நோற்றவர்களாக போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் தொடரவேண்டும். புத்தளத்தில் நடை பெற்ற இந்த ஆரப்பாட்டம் மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கு மேலாக அந்த மதரஸாவையும் அதன் சொத்துக்களையும் பாதுகாத்து வக்பு சொத்தாக மதரஸாவின் உடைமைகளாக மாற்றுவதற்கு என்ன ஆக்கபூர்வமான சட்டஙகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேணடும் என்பதை சட்ட வல்லுனர்கள். துறைபோனவர்களின் ஆலோசனயைுடன் ஒரு சட்டத்தரணிகள் குழு இரவு பகலாக ஈடுபட்டு விடயத்தை சட்டரீதியாக அணுகும் செயல்முறை மிகவும் திட்டமிட்டுத் தொடர வேண்டும். அப்போது தான் இந்த இலக்கையடைந்து கொள்ளலாம். இது ஓரிரு ஆர்ப்பாட்டங்களுடன் முடிவடையக்கூடாது. தொடர்ந்தும் பல்வேறு அழுத்தங்களை அபகரிக்க எத்தனிக்கும் குடும்பத்துக்கு கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது அந்த குடும்பத்துக் உளவியல் ரீதியாகவும் தன்மான அடிப்படையில் அவமானத்தைக் கொண்டு வரும் என்ன திட்டங்களைத் தீட்டி செயல்பட வேண்டும் என்பது பற்றி உரிய குழுக்கள் அடிக்கடி கூடி ஆராய வேண்டும். அதன் மூலம் தான் இதனைச் சாதிக்கலாம்.
ReplyDelete