"பசில் உள்ளிட்ட தலைவர்கள், வாயை மூடி கொண்டிருப்பது தவறு"
பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் தேசிய வளங்களை விற்பனை செய்வது தவறு என தெரிவிக்காமல் வாயை மூடி கொண்டிருப்பது தவறு என பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெற்றோலியக் கிளையின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.
தேசிய வளங்களை விற்பனை செய்வதல்ல சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை எனத் தெரிவித்த அவர், கஞ்சன விஜேசேகரவின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு முன்னால் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் கட்சி என்ற வகையில் எண்ணெய் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் அரசியல் கட்சி பேதமின்றி முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை விற்பனை செய்வதை தடுக்கும் ஒரே நோக்கத்துடன் இந்த தொழில்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன, ஆனால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் சதி அதில் இல்லை என்றும் அவர் கூறினார்.
இரவில் மஹிந்த மச்சானின் கூட்டம் பஸிலின் தலைமையில் ரணில் மச்சானுடன் போடும் திட்டங்கள் தான் பகலில் கெபினட் தீர்மானங்களாக வௌிவருகின்றன. அரச உடைமைகளையும், மிகவும் பெறுமதிவாங்ந்த அரச கட்டடங்கள், நிலங்களை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானித்ததுடன் அவற்றின் கமிசன்கள் எப்படி எங்கே எந்த வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் என்பது தான் இரு மச்சான்களும் இரவோடு இரவாக பேசும் இரகசியங்களும் பேச்சுவார்த்தைகளும். அவை பற்றி யாருக்கும் எங்கும் தெரிவிக்கப்படமாட்டாது. நாட்டின் பெறுமதியான அத்தனை சொத்துக்களையும் விற்று அவற்றின் கமிசன்கள் ஒரு மச்சானின் குடும்பத்துக்கும் மற்ற மச்சானின் வங்கிக் கணக்குகளுக்கும் சென்றடையும் வரை இலங்கைக்கான அபிவிருத்தியும், முன்னேற்றமும் தொடரும். இந்த நாட்டு மக்களும் அந்த இரண்டு மச்சான்களைவிட மோசமாக இருக்கும்வரை இந்த கொள்ளையடித்தல் தொடரும். ஆனால் இடையில் உள்ள அப்பாவி மக்களைக் காப்பாற்ற இறைவன் நாடியிருந்தால் அந்த இரண்டு சைத்தான்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க அந்த இறைவன் சக்திவாய்ந்தவன்.
ReplyDelete