Header Ads



வனிந்துவை முந்திய ரஷீத்


இலங்கை அணியின் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய இருபதுக்கு 20 தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார்.


இந்த சமீபத்திய தரவரிசை புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு, வனிந்து ஹசரங்க முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.


எனினும், தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், தரவரிசையில் வனிந்துவை இரண்டாம் இடத்திற்கு தள்ளி ரஷீத் கான் முதலிடத்திற்கு வந்தார்.


புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்லா ஃபருகி வனிந்துவுக்கு அடுத்தபடியாக 692 புள்ளிகளுடன் வனிந்துவை விட மூன்று புள்ளிகள் பின்தங்கி உள்ளார்.


இந்த தரவரிசைப் பட்டியலில் வனிந்துவைத் தவிர வேறு எந்த இலங்கை பந்துவீச்சாளரும் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெறவில்லை.


இதேவேளை, மகிஷ் தீக்ஷனா 643 புள்ளிகளைப் பதிவு செய்து தரவரிசையில் 13ஆவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.