Header Ads



டொலர்களை பதுக்கியவர்களுக்காக பரிதாபப்படும் ஆளுநர்


மத்திய வங்கி வழங்கிய பொதுமன்னிப்புக் காலத்தில் டொலர்களை தம்வசம் வைத்திருந்தவர்கள் நாணயத்தை மாற்றியிருந்தால் அதிக பெறுமதியை பெற்றுக்கொண்டிருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


“டொலர் பரிமாற்றத்தை மறைத்து வைத்திருந்தவர்கள் இப்போது கறுப்புச் சந்தையில் அவற்றை மாற்ற முயற்சிக்கின்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் குறைந்த விலையைப் பெறுகிறார்கள்.


டொலரை சேகரிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும், டொலர்களை சேகரிக்கும் இறக்குமதியாளர்களுக்கும், கறுப்பு சந்தையில் டொலர்களை சேகரிக்கும் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் அந்த டொலர்களை ரூபாய்க்கு மாற்ற நாங்கள் ஒரு மாத அவகாசம் கொடுத்தோம். ஆனால் 30 மில்லியன் டொலர்கள் மட்டுமே வசூல் செய்யப்பட்டது.


எங்கள் பேச்சைக் கேட்ட ஏற்றுமதியாளர்கள் அந்தக் காலகட்டத்தில் ஒரு டொலருக்கு சுமார் 365.00 முதல் 370.00 ரூபா வரை பெற்றனர். அதனால்தான் நாங்கள் சந்தையில் தலையிட்டோம். தற்போது டொலர்கள் அவசர அவசரமாக ரூபாவிற்கு மாற்றப்படுகிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.