ரயில் கழிப்பறையில் குழந்தை, கை விடப்பட்டமைக்கு இதுதான் காரணம்
மட்டக்களப்பு மீனகயா புகையிரத கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை காலி முகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம குறிப்பிடுகின்றார்.
போராட்டத்தின் போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றார்.
போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குழந்தை பெற்றெடுப்பது குற்றமல்ல, கழிப்பறையில் தவிக்கவிடுவதும், முறையற்றவர்கள் ஆக்குவதும் குற்றம் என்றும், போராட்டத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
இச்செய்தியை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
Post a Comment