இன்றைய வேலைநிறுத்தம் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் இன்று -01- இடம்பெறவுள்ள வேலைநிறுத்தத்தை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள், சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய, அவசர சேவைகள் எந்தவித தடையும் இன்றி மேற்கொள்ளப்படவுள்ளன. அரசாங்கமும் சுகாதார அமைச்சும் தமது பிரச்சினைகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தாமையினால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வைத்திய சேவைகள் ஒன்றிணைந்த சபை அறிவித்துள்ளது.
மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சபை அறிவித்துள்ளது.
மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மின்சார கட்டமைப்பு முன்னெடுத்து செல்லப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற மாட்டாது. நாட்டின் 12 பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இன்று இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என துறைமுக தேசிய ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வழமையான முறையில் இன்று பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எந்தவித தடையும் இன்றி இன்று ரயில் போக்குவரத்து இடம்பெறும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இன்று பகல் 12 மணியளவில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை ரயில்வே தலையகத்திற்கு அருகில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலா பஸ் போக்குவரத்து வழமையான முறையில் இடம்பெறும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்துள்ளார்.
வழமையான முறையில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். TW
Post a Comment