Header Ads



வக்பு சொத்­தான 92 வருட வர­லாற்­றினைக் கொண்ட கபூரியாவை மூடிவிட திட்டம்..?


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


92 வருட கால வர­லாற்­றினைக் கொண்ட வக்பு சொத்­தான மஹ­ர­கம கபூ­ரி­யா­ அ­ர­புக்­கல்­லூரி மாண­வர்­களை விடு­தி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றி­விட்டு கல்­லூ­ரியை மூடு­வ­தற்கு கல்­லூ­ரியின் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபை­ திட்­ட­மிட்டு செயற்­பட்டு வருவதாக அக்­கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்கம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கும் வக்பு சபையின் தலை­வ­ருக்கும் முறைப்­பாடு செய்­துள்­ளது.


இம்­மு­யற்­சியின் முதற்­கட்­ட­மாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை 3 மணி­ய­ளவில் கபூ­ரியா அர­புக்­கல்­லூரி மற்றும் மாணவர் விடு­திக்­கான மின் இணைப்பு கல்­லூரி நம்­பிக்கைப் பொறுப்­பாளர் சபையின் வேண்­டு­கோ­ளின்­பேரில் துண்­டிக்­கப்­பட்­ட­தாக கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் ஐ.எல்.டில்சாட் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.


இதே­வேளை கல்­லூ­ரியின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர் சபையின் தீர்­மா­னத்­தின்­ப­டியே மின்­வி­நி­யோக துண்­டிப்­புக்கு மின்­ விநியோக நிறுவனத்திடம் (LECO) கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­தாக அதன் செய­லாளர் குறிப்­பிட்­டுள்ளார்.


கல்­லூ­ரியின் மின்­கட்­டணம் முழு­மை­யாகச் செலுத்­தப்­பட்­டுள்ள நிலையில் மின்­வி­நி­யோக துண்­டிப்பு மேற்­கொள்­ளப்­பட்­டமை தொடர்பில் பழைய மாணவர் சங்கம் நுகே­கொடை மின்­ விநியோக நிறுவன (LECO) காரி­யா­ல­யத்தைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது கல்­லூரி நம்­பிக்கைப் பொறுப்­பாளர் சபை எழுத்து மூலம் விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு அமை­யவே மின் விநி­யோகம் துண்­டிக்­கப்­பட்­ட­தென தெரி­விக்­கப்­பட்­ட­தா­கவும் ஐ.எல்.டில்சாத் தெரி­வித்தார்.


கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை மின்­வி­நி­யோகம் துண்­டிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து மாண­வர்கள் மெழு­கு­வர்த்தி ஒளியில் இர­வி­னைக்­க­டத்­தி­ய­தா­கவும், பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­ட­தா­கவும் மின் துண்­டிப்பு கார­ண­மாக நீர்­வி­நி­யோ­கமும் தடைப்­பட்­ட­தா­கவும் அவர்­கூ­றினார்.


மின்­துண்­டிப்பு தொடர்பில் மேல்­மா­காண முன்னாள் ஆளுநர் அசாத்­சாலி தலை­யிட்டு மின்­வி­நி­யோ­கத்தை கடந்த சனிக்­கி­ழமை காலை 10 மணி­முதல் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளார். இதே­வேளை நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை 6 மணி­முதல் மீண்டும் மின்­ விநியோக நிறுவனத்தினால் மின்­வி­நி­யோகம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று இந்தச் செய்தி எழு­தப்­ப­டும்­வரை (புதன்­கி­ழமை) மின்­வி­நி­யோகம் தடைப்­பட்­டி­ருந்­தது.


நுகே­கொட LECO நிறுவனத்திடம் மின்­சார விநி­யோ­கத்தை தடை­செய்­யக்­கோரி கல்­லூரி நம்­பிக்கை பொறுப்­பாளர் சபை விடுத்த கோரிக்கை கடி­தத்தின் பிர­தி­யொன்­றினை கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்கம் கோரிய போதும் அதற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்­ட­தாக டில்சாட் தெரி­வித்தார். கல்­லூ­ரியின் மின்­பட்­டியல் ஆரம்­பத்தில் கல்­லூரி அதி­பரின் பெய­ரிலே இருந்­துள்­ளது. நம்­பிக்கை பொறுப்­பாளர் சபையின் பெய­ருக்கு பட்­டி­யலை மாற்­றிக்­கொண்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். இவ்­வி­வ­காரம் தொடர்பில் கல்­லூ­ரியின் முறைப்­பாட்­டினை மனித உரி­மைகள் ஆணைக்­குழு, கல்­லூரி தனியார் நிறு­வனம் என்­பதால் ஏற்க மறுத்­த­தா­கவும் டில்சாட் தெரி­வித்தார்.


கல்­லூ­ரியின் விடு­தியில் 68 மாண­வர்கள் தங்­கி­யி­ருந்து கல்வி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. தற்­போது மாண­வர்­க­ளுக்கு வரு­டாந்த பரீட்சை நடை­பெற்று வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்­நி­லை­யிலே மின்­துண்­டிப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என டில்சாட் தெரி­வித்தார்.


வக்பு சபை தனது இன்­றைய (வியா­ழக்­கி­ழமை) அமர்வில் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது. வக்பு சொத்­தான கபூ­ரியா அர­புக்­கல்­லூரி தொடர்பில் மாவட்ட நீதி­மன்றம் மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றம் வக்பு ட்ரிபியனல் என்பனவற்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


கபூரியாவின் நிர்வாகத்தை பழைய மாணவர்க சங்கம் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாக நம்பிக்கை பொறுப்பாளர் சபை குற்றம் சுமத்திவருவது அடிப்படையற்றது. மாணவர்களின் நலனும் வக்பு சொத்துமே எங்களது இலக்கு என பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஐ.எல்.டில்சாத் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli

No comments

Powered by Blogger.