Header Ads



இமாம் அஸ் ஸுதைஸ் கூறிய 8 முக்கிய விடயங்கள்


நேற்று புதன்கிழமை இரவு (22 ஆம் திகதி) இஷா தொழுகையைத் தொழவைத்த ஷைக் அஸ்ஸுதைஸ் பத்து நிமிடங்கள் உரையாற்றினார்.


தனது உரையில் ரமளான் மாதம் நம்மை வந்தடைந்ததற்காக முஸ்லிம் உம்மாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இம்மாதத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.


பின்ஹரம் ஷரிப் அமைதியான, பாதுகாப்பான இடம் என அல்லாஹ் சொல்கிறான்.


எனவே அமைதியைக் குலைக்கும் எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள்


(கஃபாவைச் சுற்றியுள்ள) மதாப் பகுதி தவாப் செய்யும் பகுதியென அல்லாஹ் முன்னுரிமை கொடுத்துள்ளான், எனவே தவாப் செய்பவர்களுக்கு இடஞ்சலாக தொழாதீர்கள்


ஹரம்ஷரீபின் வளாகம் விசாலமானது,  எனவே அங்கு சென்று தொழுங்கள்.


அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் மொபைலில் பேசுவது, புகைப்படம் எடுப்பது வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்வது போன்ற காரியங்களைச் செய்யாதீர்கள்.


இந்த மகத்தான இடத்திற்கு வருவதற்கு உலகின் பல பாகங்களில் மக்கள் ஆர்வத்துடன் துடித்துக் கொண்டு இருக்கின்றனர்.


அவர்களுக்குக் கிடைக்காத நல்வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது, அதை வீண் செயல்கள் செய்து வீணாக்கி விடாதீர்கள்.


அதிகமாக துஆவில் ஈடுபடுங்கள்,  உங்களுக்காகவும், முஸ்லிம் உம்மாவிற்காகவும் துஆ செய்யுங்கள்.


பெண்கள் தங்கள் ஹிஜாபையும், நாணத்தையும் பேணிக் கொள்ளுங்கள். ஆண்களுடன் கலக்காமல் உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் தொழுங்கள்,


என்று உரையை முடித்த ஷைக் உம்மத்திற்காக துஆ செய்து  அல்லாஹ் நம்முடைய ஸாலிஹான அமல்களை ஏற்றுக்கொள்வானாக! என முடித்தார்.


Muhammed Ismail Najee Manbayee

No comments

Powered by Blogger.