நாளை காலை 8 மணியுடன் வேலை நிறுத்தம் முடிவு
தமது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததை அடுத்து, வியாழக்கிழமை (16) காலை 8 மணியுடன் தமது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
புதன்கிழமை (15) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக நாட்டில் பல சேவைகள் முடங்கியதுடன், பொதுமக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.
Post a Comment