8 பொலிஸார் காயம் - மக்களுடன் மோதியதால் விபரீதம்
வீரகட்டிய, அத்தனயால பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு கிராம மக்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று (06) பிற்பகல் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியில் சென்றவர்கள் மீது சந்தேகமடைந்து அவர்களைச் சோதனையிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மோதலாக மாறியது.
சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment