8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - 70 வயதான பிக்குவை தேடும் பொலிஸார்
எட்டு வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 70 வயதான தேரரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹெட்டிப்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபரான அந்த பௌத்த தேரர், இரண்டு மாதங்களாக அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பௌத்த தேரர் அங்குள்ள விஹாரையிலேயே தங்கியிருப்பவர் என்றும். எனினும், தற்போது தலைமறைவாகிவிட்டார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Post a Comment