Header Ads



இலங்கைக்கு கிடைக்கவுள்ள 7 பில்லியன் டொலர்கள்


மேலும் 7 பில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக இலங்கை பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் உதவியின் கீழ் இந்தக் கடன்கள் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த கடன்கள் தொடர்பில் அண்மையில் உலக வங்கியின் இலங்கை பணிப்பாளர் சியோ கன்டா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.


இதன்போது எதிர்கால பொருளாதார நடவடிக்கைகளுக்கு உலக வங்கியின் ஆதரவு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, இலங்கைக்கு ஆதரவாக இந்த கடன் தொகை வழங்கப்பட உள்ளது.


1 comment:

  1. இதுவரை வாங்கிய பில்லியன் கணக்கான கடன்களுக்கு என்ன நடைபெற்றது என்பது யாருக்கும் தெரியாது. அது பற்றி உரிய அமைச்சுகள், திணைக்களங்களைக் கேட்டால் அல்லது பாராளுமன்றத்தில் வினாவினால் அவற்றுக்கு உரிய பதில்கிடையாது. அந்த பணத்தைத் திருப்பிக் கொடுப்பது பற்றி அனைவரும் கதைக்கின்றார்கள். அதில் வேறு எடுத்த கடனைத் திருப்பிச் செலுத்த மற்றொரு கடனை எதிர்பார்க்கும் நாடு தென் கிழக்கின் சுவர்க்கம் இலங்கைதான். பலவருடங்கள் எதிர்பார்த்து மக்கள் மீது படுசுமையை ஏற்றி அரச ஊழியர்களின் சம்பளங்களிலும் வரி அறவிட்டு மின்சாரத்தை நான்கு மடங்கு அதிகரி்த்து ஐஎம்எப் போட்ட நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி கிடைத்த முன்னூறு மில்லியனில் அரைவாசி உடனே இந்தியாவிலிருந்து பெற்ற கடனைக் கொடுத்த உடன் செலுத்தப்பட்டது.இனி ஐஎம்எப் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது நிதி அமைச்சருக்கோ அவருடைய பாட்டைப் பாடும் இராஜாங்க நிதி அமைச்சருக்கோ கடன் மீள செலுத்தும் எந்த திட்டங்களும் இல்லை. இந்த நாட்டில் வாழுவதற்கு பெரும் பாவங்கள் செய்திருக்க ​வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.