Header Ads



75 வயது மூதாட்டியின் அபாரம் - குவிகிறது பாராட்டு, யாழ்ப்பாணத்தில் சம்பவம்


யாழ். விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றி முதலாவது பரிசினை வென்றுள்ளார்.


யாழ். விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார் தலைமையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.


இதன்போது விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான ஓட்டப்பந்தய நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றியுள்ளனர்.


இதன்போது ஓட்டப்பந்தயத்தில் குறித்த பாடசாலையில் படித்த 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு அதற்கான முதல் பரிசினை தட்டிச்சென்றுள்ளார்.


இவ்வாறு சாதனை படைக்க வயது எந்த தடையும் இல்லை என்பதினையும் நிரூபித்து காட்டிய மூதாட்டி புனிதவதியை பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.