70 வயது பிக்குவை அடித்துக்கொன்ற தந்தையும், சகோதரனும்..!! - நடந்தது என்ன..?
ஹெட்டிபொல அகாரஉட பகுதியைச் சேர்ந்த விகாரை ஒன்றின் பெளத்த பிக்குவே இவ்வாறு உயிரிழந்தார் .
விகாரையில் வழிபாடுகளில் கலந்துக் கொள்வதற்காக பிரவேசித்த சிறுமி ஒருவரை குறித்த பெளத்த பிக்கு தொந்தரவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது .
பின்னர் , பௌத்த பிக்குவை தேடி சிறுமியின் தந்தையும் சகோதரனும் விகாரைக்கு சென்றனர் . அவர் அங்கிருந்து தப்பி பிறிதொரு விகாரையில் தலைமறைவாகியிருந்தனர் .
எவ்வாறாயினும் , பின்னர் அந்த இடத்திற்கு சென்ற சிறுமியின் தந்தையும் சகோதரனும் பௌத்த பிக்குவை தாக்கியுள்ளனர் .
இதனையடுத்து பிரதேச மக்களின் அறிவித்தலுக்கமைய , நோயாளர் காவு வாகனம் மூலம் பௌத்த பிக்கு குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .
இதன்பின்னர் , மேலதிக விசாரணைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பௌத்த பிக்கு இன்று அதிகாலை உயிரிழந்தார் .
Post a Comment