கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6500 மெட்ரிக் தொன் அரிசி வழங்க உத்தரவு
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெ.டன் அரிசி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே, 2023 ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
2023 ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 6,500 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 25 கோடியே 63 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு முதல்வரின் தீர்மானத்தை இலங்கை அரசு எட்டிப் பார்ப்பதுமில்லை. முஸ்லிமல்லாத ஒரு முதல்வர் இந்தியாவில்வாழும் 17 கோடி முஸ்லிம்களின் நலனை முன்வைத்து அவர்கள் நோன்பு மாதத்தில் நோன்பு திறப்பதற்கு உதவி செய்யும் வகையில் 25 கோடி இந்திய ரூபாவுக்கும் மேல் செலவு முஸ்லிம்களின் நலன்களைக் கவனிக்கின்றார். இலங்கையில் வசதிகுறைந்த மக்களுக்கு நோன்பு நோக்க இலங்கை அரசு வசதி குறைந்த முஸ்லிம்களுக்கு என்ன உதவி செய்கின்றது என பொதுமக்கள் வினவுகின்றனர்.
ReplyDelete