Header Ads



5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு


கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு கேகாலை மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் இன்று (08) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 2014.07.03 ஆம் திகதி இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

No comments

Powered by Blogger.