Header Ads



ஹெரோயினுடன் பிடிபட்ட மீன் வியாபாரி - விடுவிப்பதற்கு நிகழ்ந்த பணப் பேரம்


காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (17) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


லொறியின் சாரதி இருக்கைக்கு அருகில் ஒரு பையில் 49,500 ரூபா பணமும், சாரதி இருக்கைக்கு அடியில் 3 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, ​​சந்தேக நபரின் தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு சாரதியை விடுவிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய மீன் வியாபாரி என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.