Header Ads



பிக்குவின் கிரடிட் கார்ட்டை திருடி, 4 லட்சம் ரூபா மோசடி


கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் உள்ள பிரபலமான விகாரை ஒன்றில் தங்கியுள்ள பௌத்த பிக்கு ஒருவருக்குச் சொந்தமான கடனட்டை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருடப்பட்டு அதன் மூலம் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தொலைப்பேசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் குறித்த பிக்கு மேற்கொண்டுள்ள முறைப்பாட்டை அடுத்து மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


அத்துடன் விசாரணைகளுக்கான காணொளிக் காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. TWin

No comments

Powered by Blogger.