37000 எதிர்ப்பு கையொப்பங்கள் அடங்கிய அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு
திருத்தி வடிவமைக்கப்பட்டு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள (MMDA) முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சரிஆவுக்கும் முரணான விடயங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சரிஆ கவுன்சிலும், strengthen of MMDA உறுப்பினர்களும் சுமார் 37000 எதிர்ப்பு கையொப்பங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை நீதி அமைச்சர் விஜயதாஸ ரஜபக்ஸவிடம் கையளித்தனர் .
இந்நிகழ்வின் போது முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்கள் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஏகமானதான விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கடந்த காலங்களில் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் சம்பந்தமாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இஸ்லாமிய ஷரிஆவுக்கு முரணான திருத்தங்களில் பின்னனியில் நிற்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சம்பந்தமாகவும், இவர்களின் பின்னால் இருந்து செயல்படும் பின்னணி சக்திகள் சம்பந்தமாகவும் அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
( ஹில்மி )
Post a Comment