Header Ads



சகோதரியின் நகையைத் திருடி, சகோதரர் வாங்கிய 2 பொருட்கள்


யாழ்ப்பாணத்தில் சகோதரியின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளது.


இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


பெண்ணொருவர் தனது வீட்டிலிருந்து 5 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


இந்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரம் குறித்த பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சகோதரர் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத்தண்டனை அனுபவித்து தற்போது விடுதலையாகியவர் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் சகோதரனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் நகையைத் திருடி அடகு வைத்து அந்தப் பணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.