Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஊடுருவிய 2 மொழிகள்


கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி – சீன மொழிகளிலும் பெயர் பலகைகள் காணப்படுகின்றன. 


கொள்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தைப் பிரதேசங்களில் உள்ள சில வீதிகள், மிகப் பெரிய கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் சீன ஹோட்டேல்கள் போன்றவற்றில் உள்ள பெயர் பலகைகள் தனிச் சீன மொழிகளில் மாத்திரம் உள்ளமை ஏற்கனவே தெரிந்த கதை.


அதுவும் அம்பாந்தோட்டையில் தனிச் சீன மொழிதான். 


ஆனால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சீன மொழியில் பெயர் பலகைகள் இருக்கவில்லை. கொழும்பில் இந்தியத் தூதரகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இந்தி மொழியில் பெயர் பலகைகள் இருந்ததாக காணவில்லை.


ஆனால் முதன் முறையாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளில் பெயர் பலகைகளை இன்று கண்டேன்.


அ.நிக்ஸன்.

No comments

Powered by Blogger.