குவைத் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
குவைத் நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மன்னராட்சி நடக்கும் நாடுகள் இருந்தாலும், குவைத் நாட்டில் பிரதமர், அமைச்சர்கள் அடங்கிய நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆலோசிக்கப்பட்ட பிறகே ஒப்புதல் அளிக்கப்படுகின்றன.
ஆனால், அரச குடும்பத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் தொடரும் மோதல் காரணமாக நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் முடங்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதனை நிரூபிக்கும் விதமாக கடந்த 2020ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில். 2022ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் செயல்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Post a Comment