Header Ads



இறைவனின் விருப்பம் இருந்தால் மே மாதம் 2 தேர்தல்கள் நடைபெறும்


துருக்கியில் ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் திட்டமிட்டவாறு எதிர்வரும் மே 14 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டின் அதிபர்  Recep Tayyip Erdogan அறிவித்துள்ளார். 


துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் சுமார் 50,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்வதில் தேர்தல்கள் ஆணைக்குழு சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், Recep Tayyip Erdogan இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். 


'கடவுளின் விருப்பம் இருந்தால், இந்த நாடு மே 14 ஆம் திகதி தேவையானதை செய்யும்,' என பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்ததாக துருக்கி ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 


நிலநடுக்கத்திற்கு முன்னதாக அவரின் தனிப்பட்ட புகழ் குறைந்தமை மற்றும் பேரிடர் நிலையின் போது அரசாங்கம் அதனை கையாண்ட விதம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளமையையும் பொருட்படுத்தாது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.   


தேர்தல்கள் ஜூன் 18 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டிருந்த போதும், ஜனாதிபதி Recep Tayyip Erdogan அதனை மே 14 ஆம் திகதி முன்கூட்டியே நடத்தவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். 


ஜனாதிபதி Erdogan 2014 இல் முதன்முதலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2018 இல் மீண்டும் ஜனாதிபதியானார். 

No comments

Powered by Blogger.