Header Ads



2 விமானங்களில் நாட்டுக்கு வந்த VIP க்களை அம்பலப்படுத்துங்கள்


நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.


கடந்த பெப்பிரவரி மாதம் 14 ஆம் திகதி சீ 17 க்லோப்மாஸ்ட்டர் என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.


இதற்கமைய குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் 08 காரணங்களை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார்.


இதற்கமைய, விமானங்களில் இந்நாட்டிற்கு வருகை தந்தவர்கள் யார்? வருகை தந்தவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டார்களா? கடவுச்சீட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு முத்திரையிடப்பட்டதா? உள்ளிட்ட 08 கேள்விகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.