Header Ads



முஸ்லிம் வர்த்தகர் உட்பட 19 பேரை கொன்றவன் தப்பிய விவகாரம் - மேலும் 4 பேர் கைது


கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த 24 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்த போது தப்பிச் சென்றுள்ளார்.


குறித்த நபர் தப்பச் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, உணவு பான வசதிகளை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


இது தவிர சந்தேகநபர்கள் பயன்படுத்திய 02 கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


2


கடந்த வருடம்  டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு 10.10 மணி­ய­ளவில் முகத்தை மாஸ்க்­கினால் மறைத்­துக்­கொண்டு தலைக்­க­வசம் அணிந்து மோட்டார் சைக்­கிளில் வந்த துப்­பாக்­கி­தாரி மேற்­கொண்ட துப்­பாக்­கிச்­சூட்டில் ஹங்­வெல்லை நகரில் ஹோட்டல் ஒன்­றினை நடத்­திவந்த 46 வய­தான மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான முஹம்­மது பர்சான் கொலை செய்­யப்­பட்டார். இத்­துப்­பாக்­கிப்­பி­ர­யோக சம்­பவம் சி.சி.ரி.வி காணொ­ளி­களில் மிகத் தெளி­வாக பதி­வா­கி­யி­ருந்­தது.


சில­காலம் கடற்­ப­டையில் கட­மை­யாற்­றிய குறிப்­பிட்ட குற்­ற­வாளி கடற்படை­யி­லி­ருந்தும் தப்­பி­யோ­டி­யவர் ஆவார். இவர் தனித்து 9 கொலைகளையும் வேறு நபர்­க­ளுடன் இணைந்து 10 கொலை­களையும் புரிந்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து அறி­யக்­கி­டைத்­துள்­ளது.

No comments

Powered by Blogger.