நஸ்மிஹார், பரீஸ், நஸ்மின் உள்ளிட்ட 16 பேர் கட்சிகளில் இருந்து இடைநிறுத்தம்
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உற்பட 16 பேர் கட்சிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 11 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 5 பேரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் அனுமதியின்றி வேறு கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலும் போட்டியிடுவதினாலேயே இவர்களை இடைநிறுத்தியுள்ளனர் என தெரிய வருகின்றன.
இது தொடர்பாக கட்சி செயலாளர் மூலம் உறுப்பினர்களுக்கும்,கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கும் அறிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் பரீஸ் மற்றும் நஸ்மின் றோஸ், நிமல் பிரனான்து, றோய்,தீபிக்கா ஆகியோர் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவதினால் சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பனர்களான மாக் சுஜித், ரவி ஜீவானந்த, மொஹமட் நஸ்மிஹார், சாமர பிரனாந்து,பியுமி ரேனு, சிரினிக பிரனாந்து ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியிலும், சங்கீத் பெரேரா ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தியிலும், சஜித் மொஹான், நியுமல் பெரேரா, மனோஜ் ஆகியோர் சுயேட்சைக் குழுவிலும் போட்டியிடுவதனால் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஐதேக வின் சுவர்னா வீரசிங்க மற்றுமொரு சுயேட்சைக் குழுவில் போட்டியிட நியமனப்பத்திரம் கையளித்த போதும், அக் குழுவின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது. அவரையும் ஐதேக இடைநிறுத்தியுள்ளது.
கட்சி இடைநிறுத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இவர்கள் ஆலோசித்துவருகின்றனர்.
Post a Comment