இந்தியா - வங்காளதேசம் இடையே 131.5 KM தொலைவுக்கு எண்ணெய் குழாய் பாதை
இந்தியா-வங்காளதேசம் இடையே 131.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட எண்ெணய் குழாய் பாதையை பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நேற்று முன்தினம் கூட்டாக தொடங்கி வைத்தனர்.
இந்த குழாய் வழியாக இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் வினியோகிக்கப்படும். நிகழ்ச்சியில், ஷேக் ஹசீனா பேசியதாவது:-
வங்காளதேசத்தின் உண்மையான நண்பன், இந்தியா. ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும்போது, இந்த குழாய் வங்காளதேசத்தின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யும். இது இருநாட்டு நட்புறவில் மைல்கல் சாதனை. எரிபொருள் கொண்டு செல்வதற்கான நேரத்தையும், செலவையும் குறைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Post a Comment