13 இலட்சம் பெறுமதியான கைக்கடிகாரம் திருட்டு
கொழும்பு 02, ஹைட் பார்க் பிளேஸில் அமைந்துள்ள முன்னாள் அரச பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜேவர்தனவின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், பல பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கொம்பனிவீதிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 – 27ஆம் திகதிகளில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 இலட்சம் பெறுமதியான கைக்கடிகாரம் மற்றும் சில பழங்கால ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனிவீதி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். TL
Post a Comment