Header Ads



121 மில்லியன் டொலர்களை இந்தியாவுக்கு கொடுத்துவிட்டு, மீண்டும் கடனை எதிர்பார்த்துள்ள இலங்கை


இந்தியாவிடமிருந்து புதிய கடனைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் சிரேஷ்ட பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.


இலங்கை மத்திய  வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார். தெரிவித்தார்.


இந்த கடன் தொகையானது இந்திய ரூபாயில் பெறப்படும் என்றும் கடன் தொகையின் பெறுமதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.


கடன் பெறுமதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்திருக்கும் என்றும் இந்தப் பணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.