நான் உட்பட 10 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளோம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் உட்பட மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை விரைவில் நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.
காமினி லொக்குகே, ஜனக பண்டார தென்னக்கோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ். எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
60 அமைச்சர்களுக்கு செய்வதற்கு வேலையில்லை. வேலைசெய்வதற்கு முன்வருபவர்களுக்கு அனுமதியில்லை. அனைத்தும் மேலிடத்தின் அனுமதி தேவை. வேலை இருந்தால் அவற்றைச் சரியாகச் செய்வதில் இடையூறுகளும் தடங்கல்களும் அரசினால் உருவாக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கும் அமைச்சுக்களுக்கு வழங்கப் பணமில்லை. இந்த நிலைமையில் இன்னும் பத்து அமைச்சர்களை நியமிப்பது 24 மணிநேரமும் போதையில் இருக்கும் ஒரு ஜோக்கரால் தான் அது சாத்தியமாகும். எனவே எதிர்வரும் மூன்று நான்கு மாதங்களில் இந்த ஜோக்கர்கள் சுகமாக உண்டு உடுத்து கழியாட்டம் ஆடும் போது பொதுமக்கள் பசியாலும் பட்டனியாலும் மரணிக்கும் நிலைமை வரும்.அந்த இருண்ட காட்சி மிகவிரையில் ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ReplyDelete